தையிட்டி விகாரை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரை போராட்டம் நடைபெற்ற போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமர்ந்திருந்த கூடாரங்களை உடைத்து எறிந்ததாக காட்டி முகநூலில் காணொளி ஒன்று பரப்பப்பட்டு வருவதை தொடர்ந்து, வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் நேற்று (01) உதவி பொலிஸ் அத்தியட்சகரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.



