இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடியுள்ளன.
பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதிப் பிரதமரான சைப் பின் சயீத் அல் நஹ்யானுக்கு இடையிலேயே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் வர்த்தம் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது ஐக்கிய அரபு அமீரகத்துடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.