கொரோனா: பெருந்தொற்று பேராபத்தின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம்- அமெரிக்க அதிபர்  எச்சரிக்கை

416 Views

கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம்

அமெரிக்காவில் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிவரும் சூழலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ளுங்கள் என மக்களிடம் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன்  வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பெருந்தொற்று குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன் ,“

“அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இது வரையில்  ஒரு இலட்சத்து 17 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்த குளிர்காலத்தில் அதிகமானோர் நோய் வாய்ப்படவும், அதிகமான உயிரிழப்புகள் நேரவும் வாய்ப்புள்ளது. இப்போது இருக்கும் ஒரே பாதுகாப்பு தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே. அமெரிக்கா  கொரோனா பெருந்தொற்று  கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம்.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முதல் மருந்தை போட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் மருத்தை போட்டுக் கொள்ளுங்கள்” என    வலியுறுத்தியுள்ளார்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad கொரோனா: பெருந்தொற்று பேராபத்தின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம்- அமெரிக்க அதிபர்  எச்சரிக்கை

Leave a Reply