கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை மேம்பாட்டு பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவுடன் ஐ.நா இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே ஃபிராஞ்ச் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்கு (Foreign Remittances) அப்பால் தொழில் முயற்சியாண்மை, சிறிய – நடுத்தர அளவிலான நிறுவனங்களின் (MSME) வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் புலம்பெயர் இலங்கையர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பது தொடர்பாக அவ்வேளை ஆராயப்பட்டது.



