திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 64ம் கட்டை மலையில் அமைக்கப்படவுள்ள பௌத்த விகாரைக்காக பொதுமக்களின் விவசாய காணிகளை அபகரிப்பு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் பேரணியும் பாதிக்கப்பட்டுள்ள மக்களால் நடத்தப்பட்டது.