நீதிமன்றப் பொறிமுறையினால் வழங்கப்படும் தீர்மானங்களே நாட்டின் சட்டம் தொடர்பான மிகச் சரியான இறுதித் தீர்மானங்களாகும் எனவும், அந்த அனைத்துத் தீர்மானங்களுக்கும் அரசாங்கம் என்ற ரீதியில் தாம் முழுமையாகக் கட்டுப்படுவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டப் பெண்கள் மாநாட்டில் நேற்று (18) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளுக்கு அப்பால் தம்மிடமிருந்து வேறு தீர்மானங்களை எவரும் எதிர்பார்க்க வேண்டாம் என வலியுறுத்திய ஜனாதிபதி, நாட்டின் சட்டத்தின் இறுதி விசாரணையைக் கோதுவது நீதிமன்றமே எனவும் தெரிவித்துள்ளார்.



