சீரற்ற காலநிலையால் 9 பேர் உயிரிழப்பு

இலங்கையில் தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால்  பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 1,876 குடும்பங்களைச் சேர்ந்த 6,754 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 09 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த இயற்கை பேரிடரால் 06 வீடுகள் முற்றாகவும், 1,209 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவற்றுக்கான உரிய நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.