இலங்கையில் பாலியல் ஊக்க மருந்துகளை இளைஞர்கள் பயன்படுத்துவதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவர்களின் ஆலோசனையின்றி மருந்துகளைப் பயன்படுத்துவது, தரமற்ற மருந்துகளின் பயன்பாடு மற்றும் தவறான அளவுகளில் மருந்துகளைப் பயன்படுத்துகின்றமை இந்த உயிரிழப்புக்களுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன” எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
20 தொடக்கம் 25 வயதுகளுக்கு இடைப்பட்டோரும், 40 தொடக்கம் 45 வயதுகளுக்கு இடைப்பட்டோருமே, இந்த நிலைமையை அதிகமாக எதிர்கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.