இலங்கையில் புராதன காலம் தொட்டு மரணதண்டனை நிறைவேறிய வரலாறுகள் உண்டு.
ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் 1681,ம் ஆண்டு குற்றவாளியை யானையால் மிதித்துக் கொல்லப்பட்டு மரண தண்டனை நிறைவேறியது.
பிரித்தானியர் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இலங்கை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 285,வது பிரிவின்படி, கொடூரமான முறைகளில் மரணதண்டனை விதிக்கப்படுவது தடை செய்யப்பட்டு, அப்போதைய இலங்கை ஆளுநரான பிரெடரிக் நோத்தினால் தூக்கிலிடும் முறை அமுல்படுத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களிலும், கோட்டைகளிலும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் 1871-ம் ஆண்டு கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறையிலும், அதனைத் தொடர்ந்து கண்டி போகம்பறை சிறையிலும் தூக்குமேடைகள் அமைக்கப்பட்டன.
1948, பெப்ரவரி,04, ல், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் 1956, ஏப்ரல்,05, ல் ஶ்ரீலங்கா சுதந்திரகட்சி ஆட்சியில் பிரதமராக ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்கா வினால் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது இல்லாமலாக்கப்பட்டது.
எனினும் 1959,செப்டம்பர்,25, ல், அதே பிரதமர் பண்டாரநாயக்காவை சோமராம தேரர் என்ற பௌத்த பிக்கு கொலைசெய்தார்.
அவரை கொலை செய்தமையால் 1959,செப்டம்பர்,26, ல் புதிய பிரதமராகப் விஜயானந்த தகநாயக்கா பதவியேற்றபின்னர் 1959 நவம்பர் ல் மீண்டும் மரணதண்டனை நிறைவேற்றும் சட்டத்திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேறி 1962,யூலை,06,ல் சோமாராம என்ற பிக்குவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக மரணதண்டனை 1976,யூன்,23,ல் J.M சந்திர தாச என்பவருக்கே வெலிக்கடைசிறையில் மரணதண்டனை நிறைவேற்றபட்டது .
இதற்கு பின்னர் எந்த குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
அதற்கான காரணம்:
1978 ,செப்டம்பர்,07,ல் புதிய அரசியலமைப்பின்படி மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் ஒப்புதல் அவசியமாக்கப்பட்டதுடன், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் எவரும் மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணங்களில் கையெழுத்திடாதத்தன் காரணமாக தண்டனை நின்று போனது.
இலங்கை சட்டத்தின் அடிப்படையில் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின் 285 வது பிரிவின்படி, நாட்டின் ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட திகதி மற்றும் இடத்தில் குற்றவாளி தூக்கிலிடப்பட வேண்டும். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 286 வது பிரிவின்படி, சம்பந்தப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படும் வரை குற்றவாளி சிறை கண்காணிப்பாளரின் காவலில் வைக்கப்படுவார் என்பதே நடைமுறையானது.
நீதிமன்றங்கள் மரணதண்டனை தீர்ப்புகளை வழங்குகின்றன, ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் அதனை நிறைவேற்றுவதில்லை.
இலங்கை மனித உரிமைகள் ஆணையம் மரணதண்டனையை முழுமையாக நீக்கப் பரிந்துரைக்கிறது.
பௌத்த துறவிகளும் இதனை எதிர்கின்றனர்.
நூற்றுக்கணக்கான கைதிகள் மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறைகளில் உள்ளனர்.
மரணதண்டனை கைதிகளுக்கான பொதுமன்னிப்பு அல்லது தண்டனை குறைப்பு என்பது நாட்டின் ஐனாதிபதி அதிஉயர் நிறைவேற்று அதிகாரத்தால் அரசியலமைப்பு விதிகளின்படி வழங்கப்படுகிறது.
இது நீதித்துறை மேல்முறையீடுகள் முடிந்த பிறகு அல்லது சிறைத்துறை பரிந்துரையின் பேரில் செயல்படுத்தப்படுகிறது.
பொதுமன்னிப்பு மற்றும் தண்டனை குறைப்பு முறைகள் நாட்டின் ஜனாதிபதிக்கு மட்டுமே மரணதண்டனையை முழுமையாக மன்னிக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ அதிகாரம் உண்டு.
மரணதண்டனையானது சில சமயங்களில் வாழ்நாள் சிறைத்தண்டனையாக குறைக்கப்படும்.
கைதியின் நல்லொழுக்கம், சிறைவாசம் அனுபவித்த காலம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும்.
பொதுமன்னிப்பு வழங்கும் முன் நீதி அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் கருத்துகள் பெறப்படவேண்டும்.



