புத்தளத்தில் கொத்து கொத்தாக இறக்கும் காகங்கள்

புத்தளம் நகரில் பல காகங்கள் இறந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காகங்கள் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

புத்தளம் நகரின் வானா வீதி ஏரிக்கு அருகில் நேற்று (07) காலை முதல் காகங்கள் இறந்து வருகின்றன.

இது தொடர்பில் புத்தளம் மாநகர சபைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இறந்த காக்கைகளின் உடல் உறுப்புகளை பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி அறிக்கையை பெற்றுக்கொள்ள புத்தளம் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.