Covid –19 சம்பந்தமான முன்னோக்கிய நடவடிக்கை குறித்து அறிவிப்பு

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையின் தொடர்புபட்ட Covid – 19 கொத்தணியினால் சுகாதாரக்கொள்ளளவும் தீர்ந்துபோகும் அளவிற்கு பாதிப்பு ஏற்படும்நிலை துரிதமாக உருவாகின்றது. ஆகையினால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, சுகாதார அமைச்சின் தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், தற்போது வீரியமாக பரவிவரும் Covid – 19 கொத்தணியின் பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பின்வரும் யோசனைகளை முன்வைத்துள்ளது.

1. ஊழஎனை – 19 நோயாளிகளை இனங்காணும் பொருட்டு, செய்யப்படும் பரிசோதனை செயற்பாடு மற்றும் பரிசோதனைக் கோட்பாட்டை உடனடியாக வெளியிடவேண்டும்.

2. தற்போது செய்யப்படும் Pஊசு அளவினை விஸ்தரிப்பதோடு, அதன் தகைமையினையும் பேணுதல்.

3. தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு மற்றும் Pஊசு பரிசோதனை நிலையங்களில் மனிதவளத்தை அதிகரித்தல்.

4. நோயாளிகளின் நோய் குணங்குறிகளின் அடிப்படையில் அத்தியாவசிய நோயாளிகளின் சிகிச்சையில் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஊழஎனை – 19 சிகிச்சை சேவை சம்பந்தமாக, வைத்தியசாலைகளை பெயரிட்டு, அதன் சுகாதார கொள்ளளவை அதிகரித்தல்.

5. ஊழஎனை – 19 நோயாளிகளது சுகாதார சேவை பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் வைத்தியசாலையில் நடைபெறும் நாளாந்த நிகழ்வுகளை தற்காலிகமாக தளர்த்தி அதன்மூலம் சுகாதார சேவையின் வளத்தினை அதிகரித்தல்.

6. தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு முன்மொழிகின்ற முகாமைத்துவ செயற்பாட்டை பலதரப்புக்கு பிரித்துக் கொடுப்பதோடு, ஊழஎனை – 19 நோயாளிகள் மற்றும் தொடர்பாளர்களினை புPளு தொழிநுட்பத்தை பயன்படுத்தி குறித்துக் கொள்வதன் மூலம் சிவப்பு வலயத்தில் மக்கள் நடமாட்டத்தினை கட்டுப்படுத்துவதற்கான சட்ட ஒழுங்குகளை அமுல்படுத்தல்.

7. ஊழஎனை – 19 நோயாளிகளை இனங்காணும் விதம் சிகிச்சை மற்றும் வைத்தியசாலை முகாமைத்துவம் சம்பந்தமான வழிகாட்டியை வெளியிடுதல்.

8. சுகாதார ஊழியரின் ஊழஎனை – 19 நோயினால் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் அவ்வாறான ஊழியர்களை தனிமைப்படுத்தலுக்குட்படுத்தவும், மற்றும் Pஊசு பரிசோதனையினை மேற்கொள்வது சம்பந்தமான வழிகாட்டியை வெளியிடுதல்.

9. தனிமைப்படுத்தல் செயற்பாட்டின்போதும் ஊழஎனை – 19 தொடர்பாளர்களை இனங்காணும் பொருட்டும், தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊழியர்கள், இராணுவப் புலனாய்வுப் பிரிவு என்பனவற்றின் கடமைகள் சரிவர ஒருங்கமைக்கப்படுவதனை உறுதிப்படுத்தல்.

10. தற்போது நோயின் பரம்பல் மற்றும் ஆபத்தான பிரதேசங்கள் பற்றி பொது மக்களுக்கு தெரியப்படுத்துவது சம்பந்தமாக சுகாதார அதிகாரிகளின் பொறுப்புக்களைச் செயற்படுத்தல்.