கொரேனா நோயின் தாக்கம் – உலகில் உயிரிழந்தவர்கள் 500,539

உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவரும் கோவிட்-19 நோயின் தாக்கதினால் இதுவரையில் 500,539 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,066,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 5,451,474 பேர் குணமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நாடுகளில் அதிகம் மக்கள் உயிரிழந்த நாடுகள் வருமாறு:

அமெரிக்காவில் 128,132 பேரும், பிரேசிலில் 57,070 பேரும், பிரித்தானியாவில் 43,514 பேரும், இத்தாலியில் 34,716 பேரும், பிரான்ஸில் 29,778 பேரும், ஸ்பெயினில் 28,341 பேரும், இந்தியாவில் 16,103 பேரும் ரஸ்யாவில் 8,969 பேரும் மரணமடைந்துள்ளனர்.