217 Views
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தலைநகர் பெய்ஜிங்கில் சனிக்கிழமை முதல் இதுவரை மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் அலுவல்பூர்வ எண்ணிக்கை 5,229 ஆக அதிகரித்துள்ளது. இதனால் 2 கோடியே 10 இலட்சம் பேர் வசிக்கும் பெய்ஜிங் நகரத்தின் சில பகுதிகள் மீண்டும் பொது முடக்கத்திற்கு உள்ளாகியுள்ளன.