வேலணை சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்

mavee வேலணை சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்

யாழ். தீவகம் -வேலணை சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வார ஆரம்ப நாள் நினைவேந்தல் நேற்று  உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தீவக சிவில் சமூக செயற்பாட்டு அமைப்பின் தலைவர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஊர்காவற்றுறை – வேலைணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலர், பொதுமக்கள், தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.