வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க கூட்டமைப்பு தீர்மானம்

51 Views

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேசியக்கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

வாக்கெடுப்பு தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வரவு செலவு திட்டத்தில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பு அதிருப்தி கொண்டுள்ளது. எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சில உறுதிமொழிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளதால் அதனை எதிர்காதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply