இலங்கையில் மேலும் 41 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

இலங்கையில் மேலும் 41 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்து ள்ளனர்.

நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 23 ஆண்களும், 18 பெண்களும் அடங்குகின்றனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 30 – 50 வயதுகளுக்கு இடைப்பட்ட 9 ஆண்களினதும், 3 பெண்களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 14 ஆண்கள் மற்றும் 15 பெண்களின் மரணங்களும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 702 ஆக அதிகரித்துள்ளது.

இதே வேளை, நாட்டில் நேற்று 1,517 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப் பட்டுள்ளனர். இவர்களில் 71 பேர் வெளி நாடுகளிலிருந்து வருகை தந்து தனிமைப் படுத்தலுக்கு உள்ளாகி வந்தவர்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 82 ஆயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 54 ஆயிரத்து 871 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனாத் தொற்று காரணமாக வைத்திய சாலைகள் மற்றும் தனிமைப் படுத்தல் மையங்கள் என்பவற்றில் தற்போது 23 ஆயிரத்து 487 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 இலங்கையில் மேலும் 41 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

Leave a Reply