யாழ்ப்பாணத்தில் 9 மாத குழந்தையையும் பலியெடுத்தது கொரோனா

corona 09 05 யாழ்ப்பாணத்தில் 9 மாத குழந்தையையும் பலியெடுத்தது கொரோனாயாழ். சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்பது மாதப் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில்  சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் நோய்த் தொற்றுள்ளமை கண்டறியப் பட்டுள்ளது.

குறித்த குழந்தை திடீர் சுகயீனம் காரணமாக நேற்று முன்தினம் சங்கானை வைத்திய சாலையில் சேர்க்கப் பட்டது. எனினும், அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.

முதலாவது பி.சி.ஆர். பரிசோதனையில் மூலக் கூறுகள் போதாது எனத் திருப்பப்பட்டது. மீண்டும் எடுக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் குழந்தைக்குக் கொரோனா நோய்த் தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்த முதலாவது குழந்தை இதுவாகும்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 யாழ்ப்பாணத்தில் 9 மாத குழந்தையையும் பலியெடுத்தது கொரோனா

Leave a Reply