இலங்கையில் கொரோனா 5ம் அலை ஆபத்தானதாக அமையலாம்- GMOA எச்சரிக்கை

402 Views

21 60a154c7d888e இலங்கையில் கொரோனா 5ம் அலை ஆபத்தானதாக அமையலாம்- GMOA எச்சரிக்கை

டெல்டா கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அதிகாரிகள் உணர்ந்து கொண்டு ஆபத்தான ஐந்தாவது அலையை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

“சீனாவில் வெளிப்பட்ட கொரோனா  வைரசிற்கு பின்னர் ஏற்பட்ட பிறழ்வுகள் மிகவும் ஆபத்தானவை.   எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான மாற்றமடைந்த வகைகள் உருவாகலாம்.

மேலும் சீனாவில் வெளிப்பட்ட வைரஸ்களை விட அல்பா டெல்டாவினால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இந்த வைரஸ்கள் வெளிப்படுத்தும் தடுப்பூசிகளிற்கான எதிர்ப்பாற்றலையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட பின்னரும் பாதிக்கப்படுபவர்கள் உயிரிழப்பவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகும் காலத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

நாடு தற்போது மிகவும் ஆபத்தான உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய வலுவான கொரோனா வைரசினை எதிர்கொள்கின்றது.  இதன் காரணமாக நாங்கள் நிலைமையை உணர்ந்து இன்னுமொரு பிறழ்வடைந்த வைரசினை எதிர்கொள்ள தயாராக வேண்டும். இந்த பிறழ்வடைந்த வைரஸ் ஐந்தாவது அலைக்கு வித்திடலாம்.

இது டெல்டாவை விட ஆபத்தானதாக காணப்படக் கூடும். நாட்டினால் இதனை எதிர்கொள்ள முடியாது”.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply