மட்டக்களப்பில் ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று, மூவர் பலி

68 Views

மட்டக்களப்பில் 206 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் 206 பேருக்கு கொரோனா: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 206 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 03மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 300 என்ற கணக்கில் அடையாளப்படுத்தப்பட்டு வந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஊரடங்கு காரணமாக 200 என்ற கணக்கில் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாதம் 7959பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட அதே நேரம் கடந்த வாரம் 1414 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் 34 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 248பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதுடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகூடிய 55 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும்    மயூரன் தெரிவித்தார்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 30வயதுக்கு மேற்பட்ட 278000பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்தை தொடர்ந்து 95விதமானவாகளுக்கு முதல் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் 219000 பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி  ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply