யாழில் தொடர்ந்தும் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு-அரசாங்க அதிபர் க.மகேசன்

329 Views

தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான மண்ணெண்ணையின் அளவை விட அதிகளவு மண்ணெண்ணெய் கொழும்பிலிருந்து தருவிக்கப்படுகின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மண்ணெண்ணெய் பற்றாக்குறை தட்டுப்பாடு காணப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

தற்பொழுது யாழ் மாவட்டத்தில் உள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பெறுவதில் உள்ள சிரம நிலை தொடர்பில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த மாதங்களை விட அதிகஅளவிலான மண்ணெண்ணெய் எம்மால் தருவிக்கப்படுகின்ற போதிலும் தற்போது உள்ள இடர்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவுகிறது.

கடந்த வாரத்தில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மண்ணெண்னை விநியோகம் இடம்பெறவில்லை எனவும் மற்றும் பெருமளவில் பொதுமக்கள் மண்ணெண்ணெயினை கொள்வனவு செய்வதன் காரணமாகவும் தற்போது மண்ணெண்ணெய் பற்றாக்குறை நிலவுகின்றது என்றார்.

Tamil News

Leave a Reply