யாழில் தொடரும் தட்டுப்பாடு – பெற்றோலுக்காக பருத்தித்துறையில் இன்றும் அலைமோதும் மக்கள்

பெற்றோலுக்காக மக்கள் நீண்ட வரிசையில்

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய தினமும் (23) யாழ்ப்பாணம் வடமராட்சி – பருத்தித்துறையில் பெற்றோலுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வடமராட்சி – பருத்தித்துறையில் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்ற போதிலும் மந்திகை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலயத்தில் மட்டுமே இரண்டு நாட்களாக பெற்றோல் விநியோகம் இடம்பெற்று வருகிறது.

இதனால் பெருமளவானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தே பெற்றோலை பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவோர் உட்பட பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.