திருகோணமலை சதொசவில் பொருட்களை கொள்வனவு செய்ய அலை மோதும் மக்கள்

IMG 20220422 WA0009 1 திருகோணமலை சதொசவில் பொருட்களை கொள்வனவு செய்ய அலை மோதும் மக்கள்

பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடும் அதிக விலை ஏற்றமும் மக்களை பாதித்துள்ளது.

திருகோணமலை சதொசவில் பொருட் கொள்வனவு செய்வதற்காக மக்கள் இன்று (22) முண்டியடித்து பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க முடிந்தது.

IMG 20220422 WA0011 1 திருகோணமலை சதொசவில் பொருட்களை கொள்வனவு செய்ய அலை மோதும் மக்கள்

இருந்த போதிலும் அத்தியவசிய பொருட்களை பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த போதிலும் சில பொருட்கள் கிடைக்கப் பெறுவதில்லை அதிக விலை ஏற்றம் எம்மையும் பாதித்துள்ளது எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

IMG 20220422 WA0010 1 திருகோணமலை சதொசவில் பொருட்களை கொள்வனவு செய்ய அலை மோதும் மக்கள்

பொருட் கொள்வனவை இலகுபடுத்துவதற்காக இந்த அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்குமா எனவும் அங்கலாய்க்கின்றனர்.