இந்த அழகிய தீவு தனியே சிங்கள பெளத்தர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி , வெறுமனே ஜனாதிபதி முறைமை ஒழிப்பை மட்டும் முன்னெடுக்காது, இலங்கையை ஒரு பல்தேசமுள்ள நாடாக உருவமைத்து ஒரு சமஷ்டி கட்டமைப்பை உருவாக்குங்கள்“ என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது பாராளுமன்ற உரையின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அழகிய தீவு தனியே சிங்கள பெளத்தர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இது தமிழர், மலையகத்தமிழர் மற்றும் முஸ்லிம்களிற்கும் உரித்தானது என்பதை ஏற்றுக்கொண்டு முன்னகர்ந்தால் மட்டுமே நாம் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamil News