உறுதியான உடன்பாட்டை எட்டாத நிலையில் காலநிலை மாற்ற மாநாடு

128 Views

உறுதியான உடன்பாட்டை எட்டாத நிலையில்

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் COP26 எனப்படும் காலைநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான மாநாட்டில் திடமான முடிவுகளை எடுப்பதில் நாடுகளுக்கிடையில் கருத்து முரன்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

இரண்டு வாரம் இடம்பெற்ற கலந்துரை யாடலின் பின்னர் ஏறத்தாள 200 நாடுகள் தமக்கிடையில் உறுதியான உடன்பாட்டை எட்டாத நிலையில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு காலநிலை மாற்றத்தை கட்டுப் படுத்துவதற்காக செல்வந்த நாடுகள் வழங்கும் உதவி குறித்தும் அதிருப்திகள் ஏற்பட்டுள்ளன.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆவணம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாது மென்போக்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் பாவனையை நாடுகள் குறைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், நிலக்கரி ஏற்றுமதியை நிறுத்தப்போவதில்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இதனிடையே, உடன்பாடு கடுமையானதகாக இருக்கவேண்டும் என தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து பேச்சுக்களில் பின்னடித்து வந்ததாக காடுகள் மற்றும் காலநிலைமாற்றம் தொடர்பான காபானீஸ் அமைச்சர் லீவைற் தெரிவித்துள்ளார்.

ஏழை நாடுகளுக்கும், செல்வந்த நாடுகளுக்குமிடையில் நம்பிக்கையற்ற தன்மை ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கிளாஸ்கோவில் உள்ள பிரதிநிதிகள் பருவநிலை மாற்றத்தின் மிகக் கடுமையான தாக்கங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான இறுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

வறிய நாடுகளுக்கு கார்பன் உமிழ்வைக் குறைக்க நிதியுதவி மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதங்களுக்கு பணம் செலுத்துதல் போன்ற பிரச்னைகளில் உள்ள வேறுபாடுகளை களைவதற்கு பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துள்ள நாடுகளின் பிரதிநிதிகள் உடன்படாததால் சலசலப்பு நிலவுகிறது.

முன்னதாக, கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் அலோக் சர்மா, “சமமான தொகுப்புதவி என்பதே இங்கு முன்வைக்கப்பட்ட யோசனை. ஒவ்வொருவருக்கும் அதன் மீது கருத்து தெரிவிக்க வாய்ப்புள்ளது. எல்லோருக்கும் எல்லா அம்சங்களும் பிடிக்காமல் போகலாம். ஆனால், ஒட்டுமொத்த இது உலக நலனுக்கான தொகுப்புதவி. இந்த நோக்கத்தில் நாம் விஷயங்களை முன்னெடுக்க வேண்டும்,” என்றார்.

மேலும் “நாம் அனைவரும் இறுதியில் ஒரே ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். உலக வெப்பநிலை உயர்வை 1.5C ஆகக் கட்டுப்படுத்தும் பாரிஸ் உடன்படிக்கை இலக்கை எட்டுவதற்கு இந்த வரைவு ஒப்பந்தம் உதவும்,” என்று அவர் மேலும் கூறினார்.”இன்று வரையிலான கூட்டு நடவடிக்கை, பாரிஸில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை விட குறைவாக உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். நாம் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளோம், நாம் ஒன்று கூடி செலுத்தும் கடின உழைப்பு மூலம் ஒரு வெற்றிகரமான தீர்வை எட்ட வேண்டும். உலகம் நாம் துணிவுடன் முடிவெடுக்க வேண்டும் என விரும்புகிறது,” என்று சர்மா கூறினார்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad உறுதியான உடன்பாட்டை எட்டாத நிலையில் காலநிலை மாற்ற மாநாடு

Leave a Reply