தரம் 6 முதல் 9 வரையான வகுப்புக்கள் அடுத்த வாரம் ஆரம்பம்

109 Views

தரம் 6 முதல் 9 வரையான வகுப்புஅரச பாடசாலைகளில் இன்னும் ஆரம்பிக்கப்படாது இருக்கும் தரம் 6 முதல் 9 வரையான வகுப்புகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. முதலில் ஆரம்பப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்திய பின்னரே பாடசாலைகள் திறக்கப்பட்டன.

இதேவேளை தற்போது உயர்தர வகுப்புகள் அனைத்தையும் திறக்க முடிந்தன. இந்நிலையில் அடுத்த வாரத்தில் மற்றைய வகுப்புகளும் ஆரம்பிக்கவுள்ளன. அத்துடன் பல்கலைக்கழகங்களை திறப்பதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

Leave a Reply