இந்திய அரசுடன் சிறந்த நட்புறவு இலங்கைக்கு தொடர்ந்து உள்ளது; அமைச்சர் தினேஷ்

105 Views

இந்திய அரசுடன் சிறந்த நட்புறவுஇந்தியாவுடன் இலங்கை அரசு சிறந்த நட்புறவை கொண்டிருக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் கூற்றை நிராகரிப்பதாக தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, அரசி ன் சிறந்த வெளியுறவுக் கொள்கை மற்றும் சர்வதேச நாடுகளுடனான சிறந்த நட்புறவாலேயே கஷ்டமான நிலைமையிலும் இலங்கையால் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இந்தியாவுடன் அரசாங்கம் சிறந்த நட்புறவை கொண்டிருக்கவில்லை என எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் கூற்றை முழுமையாக நிராகரிகின்றேன். இந்திய அரசுடன் சிறந்த நட்புறவு பெருந்தொகை தடுப்பூசிகள் மற்றும் உதவிகளையும் பெற்றுக் கொள்ள இலங்கைக்கு உறுதுணையாக அமைந்தது.

அதேபோன்று ஜப்பான், ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்த இக்கட்டான காலங்களில் கொரோனா தடுப்பூசிகளையும் பாரிய ஒத்துழைப்பு க்களையும் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.

எதிர்க்கட்சியினர் சிறுசிறு பிரச்சினைகளை பெரிதாக தூக்கிப் பிடித்துக்கொண்டு செயல்பட்டால் அது மேலும் மேலும் அவர்களின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும். நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் சூழ்நிலையிலும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் வெளிநாட்டுக் கடனை எந்த குறைவுமின்றி தொடர்ச்சியாக செலுத்தியுள்ளது. கொரோனாவை காரணம் காட்டி அதனை வழங்குவதில் அரசாங்கம் தவறவில்லை.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கிராமியப் பொருளாதாரத்தை பலப்படுத்து வதற்கான அனைத்து திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் மத்திய வங்கி விவகாரத்தில் பெரும் தவறிழைத்து விட்டது. எமது அரசாங்கம் அவ்வாறு எத்தகைய தவறுகளையும் மேற்கொள்ளவில்லை. கடந்த அரசாங்க காலத்தில் பேப்பர்ச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் மோசடி மூலம் பெற்ற நிதியை மீள திறைசேரிக்கு பெற்றுக் கொள்வதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

எனினும் மத்திய வங்கியில் பாரிய மோசடி இடம்பெற்ற போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தினரான தற்போதைய எதிர்க்கட்சியினர் எமது நிதி கொள்கை தொடர்பில் விமர்சித்து வருவது விந்தையாகவுள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டம் மிகவும் சிறந்தது. சிறு சிறு குறைபாடுகளையும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் சிறுசிறு செய்திகளையும் தூக்கிப் பிடித்துக்கொண்டு எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யப் பார்க்கின்றனர். அவர்கள் எமது அரசியல் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் மேற்கொள்ளும் விமர்சனங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் மக்களே பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை கவனத்திற்கொண்டு இம் முறை வரவு செலவுத் திட்டத்தில் அவர்கள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கல்வித்துறைக் கு தேவையான போதிய நிதி இம்முறை வரவு செலவுத் திட்டம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு இது பெரும் உறுதுணையாக அமையும். எதிர்கால சந்ததியான எமது மாணவர்களுக்கான சிறந்த முதலீடாக அது அமைகிறது என்றார்.

Leave a Reply