சீன விமான விபத்து: இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை

173 Views

யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை

132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளான நிலையில், இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான முழு விசாரணைக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் உயிரிழந்தோர் குறித்த விவரம் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை. இந்த விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க மாட்டார்கள் என அஞ்சப்படுகிறது. ஆனாலும் விமானத்தில் பயணித்தோரின் உறவினர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

Leave a Reply