சிறுவர்கள் ஐவருடன் வவுனியாவைச் சேர்ந்த 10 பேர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம்

255 Views

வவுனியாவைச் சேர்ந்த 10 பேர் தமிழ்நாட்டில்

சிறுவர்கள் ஐவருடன் வவுனியாவைச் சேர்ந்த 10 பேர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ முடியாத நிலையில் தமிழகத்திற்கு அகதிகளாக தப்பிச் செல்லும் நோக்கில் இவர்கள் அனைவரும் சொந்த கண்ணாடியிழைப் படகில் தமிழ்நாட்டிற்கு புறப்பட்டுள்ளனர்.

எதிர்பாராதவிதமாக அவர்கள் பயணித்த படகு இயந்திரம் பழுதடைந்தமையால் நடுக்கடலில் சுமார் 37 மணித்தியாலங்கள் உயிருக்கு பேராடிய நிலையில் நேற்று தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர்.

தமக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகு மூலம் கடந்த 21ஆம் திகதி காலை 9.00 மணியளவில் மன்னார் பகுதியில் இருந்து புறப்பட்ட இவர்கள் நேற்று இரவு 8.00 மணியளவிலேயே தனுஷ்கோடி கரையை அடைந்துள்ளனர்.

unnamed 2 1 சிறுவர்கள் ஐவருடன் வவுனியாவைச் சேர்ந்த 10 பேர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம்

இவ்வாறு தனுஷ்கோடியை சென்றடைந்த வவுனியாவைச் சேர்ந்த 10 பேரிடம் ஆரம்பகட்ட விசாரணைகள் தமிழக காவல்துறையினரால் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னாரைச் சேர்ந்த ஆறுபேர் இவ்வாறு நேற்று தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதி மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply