இடம்பெயர்ந்த ஆப்கானியர்களுக்கு அரிசி மூடைகளை வழங்கிய சீனா

459 Views

ஆப்கானியர்களுக்கு அரிசி மூடை

ஆப்கானியர்களுக்கு அரிசி மூடை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கும்/ தேவையானோருக்கும் சீன அரசு சார்பாக அரிசி வழங்கப்பட்டுள்ளது. இந்த மனிதாபிமான உதவியின் மூலம் 3,000 பேர் பயனடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

“இந்த உதவி இரண்டு நாட்களுக்கு போதுமானதாக இருக்கலாம், ஆனால் இது நிரந்தர தீர்வல்ல,” என காபூல்வாசி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த உதவிக்கு மக்கள் நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், ஆப்கானிஸ்தான் தற்போது எதிர்கொண்டு வரும் நெருக்கடிக்கு இது போதுமான உதவி இல்லை என வேறுசிலர் கூறியுள்ளனர்.

Leave a Reply