சீனா இல்லை, இலங்கைக்கு உதவ முன்வரும் நாடுகளை வரவேற்போம்-அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

சீனா இல்லை, இலங்கையில் எந்த நாடு முதலீடுகளை செய்வதற்கும் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுவதற்கும் முன்வரும் நாடுகளை இலங்கை வரவேற்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சீனாவினைப் பற்றி பேசுபவர்கள் ஏன் இந்தியாவினைப் பற்றி பேசுவதில்லை. யாழ்ப்பாணத்தில் இந்தியா இருப்பது யாருக்கும் தெரியவில்லையா எனவும் கேள்வியெழுப்பினார்.

சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மக்கள் மயப்படுத்தப்படவுள்ள மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு விமான நிலையத்தின் பணிகளை பார்வையிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் விமான போக்குவரத்தினை இலகுபடுத்தி சுற்றுலாப்பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப் படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விஜயத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு அதிகளவான விமானங்கள் வந்துசெல்லவும் குறைந்த செலவில் விமானப் பயணங்களை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும்  தெரிவித்தார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 136This week ilakku Weekly Epaper 136 June 27 2021 e1625120114464 சீனா இல்லை, இலங்கைக்கு உதவ முன்வரும் நாடுகளை வரவேற்போம்-அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

This week ilakku Weekly Epaper 136 June 27 2021 சீனா இல்லை, இலங்கைக்கு உதவ முன்வரும் நாடுகளை வரவேற்போம்-அமைச்சர் பிரசன்ன ரணதுங்க