தமிழர் பகுதிகளில் சீனா கால்பதிப்பு இந்தியாவுக்கு நேரடி அச்சுறுத்தல்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரிக்கை

456 Views

தமிழர் பகுதிகளில் சீனா கால்பதிப்பு
தமிழர் பகுதிகளில் சீனா கால்பதிப்பு: தமிழர் தாயகத்தில் சீனா மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், எந்த திட்டங்களானாலும் தாயக மக்களிடமிருந்து வெளிப்படையான இசைவு பெற்ற பின்னரே ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்தியப்பெருங்கடலில் சீன வட்டத்தை விரிவாக்கும் ஆட்டத்துக்காகத் தமிழர் தாயகப் பகுதிகளை பலியிடவிடாது, தமிழர் தேசமும் தமிழர் அரசியல் தலைமைகளும் தமது அரசியல் இறையாண்மையை செலுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக நாடுகடந்த தமிழீழ அர சா ங் க ம்வெ ளி யி ட் டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் ப ட் டு ள் ளை வ வ ரு மாறு –

இலங்கைத் தீவின் தமிழர் தாயகப் பகுதி யின் வடபுலத்தே, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இயற்றும் மின்சக்தி திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ள சீனா, இந்த முடிவுக்கு “மூன்றாம் தரப்பின் பாதுகாப்பு’ காரணமெனக் கூறியுள்ளது. சீனாவின் இந்த முடிவு வரவேற் கத்தக்கது. எனினும் தமிழர் தாயகத்தில் சீனா மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும்.

போருக்குப் பின்னராக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தாயகப் பகுதிகளில் ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் எதுவானாலும் அம்முயற்சிக்கு தாயக மக்களிடமிருந்து வெளிப்படையான இசைவு பெற்ற பின்னரே ஆரம்பிக்க வேண்டும். இசைவு என்பது திட்டங்களின் அரசியல், பொருளியல் கூறுகளுக்கு மட் டுமன்று, ந ம் ப க மா ன ப ன் னா ட் டு அமைப்பொன்றின் சூழலியல் மதிப்பாய்வின் ஊடாகச் சூழலியல் கூறுகளுக்கும் இசைவாக முன்னெடுக்கப்பட வேண்டும். சீன நிறுவனங்களுக்கு திட்டங்கள் வழங்குவதன் மூலம் இந்தியாவைச் சுற்றிவளைக்கவும் அடக்கி வைக்கவும் சீனாவுக்கு உதவும் இலங்கையின் நகர்வுகள் தமிழர் இறையாண்மை மீது நெடுந்தாக்கத்தை ஏற்படுத்தும்.

வட புலத்தே யாழ். குடா நாட்டையும் இந்தியாவின் தமிழ்நாட்டையும் பிரிக்கும் குறுகலான பாக்கு நீரிணையில் அமைந்த சிறு தீவுகளான நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாதீவு ஆகிய இடங்களில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி நிலையங் களை நிர்மாணிப்பதற்கு சைனோ சர் ஹைப்ரிட் டெக்னாலஜி என்ற சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான சீனத் தூதரகம் “மூன்றாம் தரப்பு’ எதுவென்று கூறா விட்டாலும் அது இந்தியாதான் என்று நம்பப்படுகிறது. அந்தச் சிறு தீவுகளில் இந்திய நிறுவனமான அதானி குழுவுக்கு 1.2 கோடி அமெரிக்க டொலர் மதிப்புள்ள திட்டப் பணியை வழங்கும் ஒப்பந்தத்தை கடந்த பெப்ரவரியில் கொழும்பு நீக்கம் செய்து, அதனை சீன நிறுவனத்துக்கு வ ழ ங் கி யே பா து இ ந் தி யா த ன து பாதுகாப்பு சார்ந்த கவலைகளைத் தெரி வித்தது. இந்திய நிறுவனத்தின் முயற்சியை சீனம் கீழறுத்த செயல் அந்த நேரத்தில் இலங்கையில் தன் நலன்களைக் கா த் து க்கொ ள் வே தா டு அ ண்டை நா டு கே ளா டு இ ந் தி யா வு க் கு ள் ள உறவுகளைக் கெடுக்கவும் கிழக்காசிய நாடாகிய சீனத்துக்குள்ள வல்லமையாகக் கருதப்பட்டது.

இலங்கையின் வட கடலோரத்தில் யாழ். குடாநாடும் அதன் கடற்பகுதியில் அமைந்த சிறு தீவுகளும் தொன்று தொட்டுத் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளன. ஆகவே, அவை தமிழர் தாயகத்தின் பிரிக்க முடியாத பகுதிகளாகும். மேலும் இலங்கைத் தீவின் தமிழர் தாயகம் பகுதியும் அதையொட்டிய கடற்பிராந்தி யம் தமிழர் இறைமைக்கு உட்பட்டவை. இதனை உறுதி செய்திடத் தமிழர் தேச மும் தமிழர் அரசியல் தலைமைகளும் தமது அரசியல் இறையாண்மையை செலுத்த வேண்டும். – என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது

Tamil News

Leave a Reply