நேற்றிரவும் இலங்கை கடற்படை அதிரடி; மேலும் 13 தமிழக மீனவர்கள் கைது

432 Views

நேற்றிரவும் இலங்கை கடற்படைஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழையும் தமிழக மீனவர்கள் கைது செய்யும் படலம் தொடர்கின்றது. நேற்றிரவும் இலங்கை கடற்படையினரால் 13  பேர்  கைது செய்யப்பட்டனர். 

நாகைபட்டினத்தைச் சேர்ந்த இரு படகுகளில் பயணித்த 13 மீனவர்களும் பருத்தித்துறைக்கு அண்மையில் உள்ள கோவலம் பிரதேசத்தில் இருந்து 3 நோட்டிக் மைல் தூரத்தில் வைத்து கைது செய்ததாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவே காங்கேசன்துறை  துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய 55 தமிழக மீனவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 13 மீனவர்கள் கைது செய்நப்பட்டுள்ளனர்.

Leave a Reply