இலங்கையில் இராணுவ தளம் அமைக்க சீனா திட்டம்? பென்ரகன் அறிக்கை

இலங்கையில் இராணுவ தளம்
இலங்கையில் இராணுவ தளம் ஒன்றை அமைக்க சீனா பரிசீலித்து வருகின்றது என்று அமெரிக்காவின் படைத் தலைமையகமான பென்ரகன்
வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன மக்கள் குடியரசை உள்ளடக்கிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி என்ற தலைப்பில் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது இராணுவ பலத்தை பரந்த பிரதேசங்களில் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. இலங்கை உட்பட 13 நாடுகளில் சீனா இராணுவ தளங்களையும், இராணுவத்துக்கு வசதி வழங்கும் நிலையங்களையும் நிறுவுவதற்கு இடமுள்ளது.

இலங்கை தவிர, கம்போடியா, சிங்கப்பூர், மியன்மார், தாய்லாந்து இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் சீனா இவ்வாறான தளங்களை நிறுவவுள்ளது.

சீனா தமது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை பிராந்தியத்தில் வலுப்படுத்துவதற்கு இதன் மூலம் எதிர்பார்ப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad இலங்கையில் இராணுவ தளம் அமைக்க சீனா திட்டம்? பென்ரகன் அறிக்கை