தமிழ்நாடு:ஆரணியில் இலங்கை அகதிகள் சாலை மறியல்

482 Views

ஆரணியில் இலங்கை அகதிகள் சாலை மறியல்

ஆரணியில் இலங்கை அகதிகள் சாலை மறியல்: ஆரணி இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவா்கள் தனித் தனியாக குடியிருப்புகள் கட்டித் தரக் கோரி மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மாா்க்கெட் கமிட்டி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

பரந்த வெற்று நிலத்தில் தடுப்புகளை அமைத்து வசித்து வரும் இவா்கள், தனித் தனியாக வீடு கட்டித் தரக் கோரி ஆரணி-வந்தவாசி சாலையில் மறியலில் நேற்று ஈடுபட்டனா்.

தகவலறிந்த வட்டாட்சியா் பெருமாள், டிஎஸ்பி கோட்டீஸ்வரன், நகர காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ், கிராமிய காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் ஆகியோா் சென்று அவா்களை சமாதானப்படுத்தினா். அத்தோடு அம் மாவட்ட  திமுக செயலாளர் இலங்கை அகதிகளின் கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply