இலங்கையின் எரிசக்தி திட்டத்திற்கு சீனா 800 மில்லியன் டொலர்கள் உதவி

125 Views

சீனா 800 மில்லியன் டொலர்கள் உதவி

இலங்கையில் மாசற்ற எரிசக்தி உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்காக சீனா 800 மில்லியன் டொலர்கள் உதவி வழங்கவுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இலங்கை 2030 ஆம் ஆண்டளவில் 70 சதவிகித மாசற்ற எரிபொருளை பயன்படுத்த முடியும் என இலங்கையின் மாசற்ற எரிசக்தி அமைச்சர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் தேசிய எரிசக்தி பொறியியல் நிர்மாண நிறுவனம் 400 மெகாவற் மாசற்ற எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கான முதலீடாக 800 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.

உலக வங்கியில் உறுப்பினராக உள்ள ஐ.எப்.சி என்ற சீன நிதி நிறுவனம், இலங்கையின் வர்த்தக வங்கியை பலப்படுத்தி அதனூடாக இந்த திட்டத்திற்கான நிதி உதவியை பெற உதவிகளை மேற்கொண்டுள்ளது.

சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன்ன இந்த முயற்சிகளின் பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் எரிசக்தி அபிவிருத்திக்கு அண்மையில் இந்தியா 100 மில்லியன் டொலர்களை வழங்கியிருந்ததும், கெரவலப்பிட்டியா எரிசக்தி திட்டத்திற்கு அமெரிக்கா 250 மில்லியன் டொலர் உதவியை வழங்க முன்வந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad இலங்கையின் எரிசக்தி திட்டத்திற்கு சீனா 800 மில்லியன் டொலர்கள் உதவி

Leave a Reply