பேச்சுவார்த்தையில் இராஜதந்திரத்தின் உரிமையாளர் போல் அமெரிக்கா நடந்து கொள்வதாக சீனா குற்றச்சாட்டு

222 Views

0jT36q 0b7o4Raa00 பேச்சுவார்த்தையில் இராஜதந்திரத்தின் உரிமையாளர் போல் அமெரிக்கா நடந்து கொள்வதாக சீனா குற்றச்சாட்டு

இரு நாட்டு உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை சீனாவில் தொடங்கியுள்ளது. இதில் சீன வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஸீ ஃபெங், அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் வெண்டி ஷெர்மேன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இராஜதந்திரத்தின் உரிமையாளர் போல் அமெரிக்கா நடந்து கொள்வதாக சீனா தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது. அமெரிக்காவின் தவறான செயல்கள் மற்றும் சீனா அக்கறை கொண்டுள்ள முக்கிய நிகழ்வுகளின் பட்டியலை வெண்டி ஷெர்மேனிடம் ஸீ ஃபெங் சமர்ப்பித்துள்ளார். அதில், இருதரப்பு உறவில் நிலவி வரும் முட்டுக் கட்டைக்கு தீர்வு காண பல்வேறு நிபந்தனைகளை சீன அமைச்சர் விதித்துள்ளார்.

அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியினரின் குடும்பத்தினருக்கு அமெரிக்க விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், சீனத் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள், சீன மாணவர்களுக்கு விசா வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் போன்றவற்றை நீக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சரிடம் சீனா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், சீன அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்றும் அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தியது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply