இன்று உலக சிறுவர் நாள்: “ஒவ்வொரு குழந்தையையும் சமமாகப் பாதுகாத்து நடத்துங்கள்”

“இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்‌” ஆகையால்‌ அவர்களது சுதந்திரம்‌, உரிமை, கடமை என்பன குடும்பம்‌, பாடசாலை, சமூகம்‌ சார்ந்து பாதுகாப்பானதாகவும்‌, நீதியானதாகவும்‌ அமைவதுடன்‌ நாடளாவிய ரீதியாகவும்‌, சர்வதேச ரீதியாகவும்‌ சிறுவர்களின்‌ உலகத்தினை பாதுகாப்பது காலத்தின்‌ தேவையாகவுள்ளது.

சிறுவர்களுக்கு இடையே புரிந்துணர்வையும்‌ பொது நிலைப்பாட்டையும்‌ ஏற்படுத்துவதை நோக்காக கொண்டு 14.12.1954 அன்று ஐக்கிய நாடுகளின்‌ பொதுச்‌ சபைக்‌ கூட்டத்தில்‌ நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய ஒக்டோபர்‌ முதலாம்‌ திகதி உலக சிறுவர்‌ தினம்‌ பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை உலகம்‌ முழுவதிலும்‌ ஒக்டோபர்‌ 01 ஆம்‌ திகதி சிறுவர்களுக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது. உலக நாடூகளில்‌ வாழும்‌ மக்கள்‌ தொகையில்‌ பொதுவாக 18 வயதிற்கு குறைந்த அனைவரும்‌ சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவர்‌.

சிறுவர்களுக்கான சிறந்த உலகத்தை உருவாக்கும்‌ உரி ஊக்குவிக்கவும்‌, கொண்டாடவும்‌ ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 2024 சிறுவர்கள்‌ தினத்தின்‌ தொனிப்பொருள்‌ “பிள்ளைகளைப்‌ பாதுகாப்போம்‌ – சமமாக மதிப்போம்‌ Protect & Treat Every Child Equality  ” என்பதாகும்‌.

சிறுவர் உரிமை பிரகடனத்தில் 1991ம் ஆண்டு இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.