457 Views
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம் தொலைபேசியில் உரையாடினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் முதவமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம் தொலைபேயில் உரையாடினார். இந்த உரையாடலின் போது, பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாளிடம் தனது மகிழ்ச்சியினை அவர் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.