பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஹீலியம் நிரப்பிய பலுான்கள் வெடித்து விபத்து

சென்னை பாடியில் மோடி பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில்  ஹீலியம் பலூன்கள் வெடித்து சிதறியதில் பலர் எரிகாயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை பாடியில் பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இந் நிகழ்ச்சியில் இரண்டாயிரம் ஹீலியம் பலூன்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது விவசாய அணி துணை தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது.

எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பொறி பலூன் மீது பட்டத்தில் பலூன்கள் வெடித்து சிதறியது. இதில் அருகில் நின்றுகொண்டிருந்த பெரும்பாலானவர்களுக்கு தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த அனைவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

Gas filled balloons explode during PM Narendra Modi's birthday fete in Tamil Nadu | Deccan Herald

இந்த வகை ஹீலியம் வாயுவை பயன் படுத்தி, பலுான்களை நிரப்பும் போது அதற்கான பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட பலுான் வகைகளே பயன்படுத்த வேண்டும். ஆனால் இங்கு பெரும் தொகையான சாதாரண பலுான்கள் பயன்படுத்தப்பட்டது இந்த வெடிப்புக்கு காரணமாகலாம் என பெளதீகவியல் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chennai balloon blast injures three people celebrating PM Narendra Modi birthday | Chennai News - Times of India

இதுபோன்ற விழாக்கள் கொண்டாட்டங்களின்போது பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பது மட்டுமே விபத்துக்களைத் தவிர்க்கும் வழி.