“சீன உள்விவகாரத்தில் தலையிட துணிந்தால் தலையை நசுக்குவோம்”

“சீன உள்விவகாரத்தில் தலையிட துணிந்தால் தலையை நசுக்குவோம்” -அதிபர் ஷி ஜின்பிங் எச்சரிக்ககை

சீனா உள்விவகாரத்தில் தலையிடும் அன்னிய சக்திகளின் தலையை நசுக்குவோம் என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவையொட்டி இன்று நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்ச்சியில் பேசிய ஷி ஜின்பிங், “சீன உள்விவகாரங்களில் எப்படி நாங்கள் செயல்பட வேண்டும் போன்ற போதனைகள் வழங்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று  எச்சரித்துள்ளார்.

ஹாங்காங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் அங்கு ஜனநாயக ஆதரவுக்குரல்கள் ஒடுக்கப்படுவதாகவும் உலக அளவில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் வேளையில், சீன அதிபரின் இந்த கடுமையான எச்சரிக்கை அமெரிக்காவை குறிப்பிட்டுப் பேசுவது போல உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், வர்த்தகம், உளவு பார்த்தல், கொரோனா பெருந்தொற்று போன்ற விவகாரங்களில் சீனாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 136This week ilakku Weekly Epaper 136 June 27 2021 e1625120114464 "சீன உள்விவகாரத்தில் தலையிட துணிந்தால் தலையை நசுக்குவோம்"

This week ilakku Weekly Epaper 136 June 27 2021 "சீன உள்விவகாரத்தில் தலையிட துணிந்தால் தலையை நசுக்குவோம்"