செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு

செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு
அரச அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரிய அளவில் காடழிப்பு இடம்பெற்று காணி அபகரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த செயற்பாடுகள் செல்வந்தர்களாளேயே இடம்பெறுவதாகவும் இதற்கு அரச அதிகாரிகள் உடந்தையாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வதற்கு ஒரு துண்டு காணி கூட இல்லாத சுமார் 3750 ஏழைக் குடும்பங்கள் தமக்கு வாழ்விடத்திற்கு ஒரு துண்டு காணி கோரியுள்ள நிலையில், அவர்களுக்கான காணிகள் இன்றுவரை வழங்கப்படவில்லை இதற்கு ஒவ்வொரு திணைக்களங்கள் மற்றைய திணைக்களங்களில் குற்றாச் சாட்டுக்களை முன்வைத்து இழுத்தடித்து வருகின்றனர்.

இதனைவிட ஏழை மக்கள் வாழ்விடத்திற்கு ஒரு சிறு துண்டு காணி பிடித்தால்  விவசாய தேவைக்காக  மரக்கிழைகள் வெட்டினால்,  கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த துடிக்கும்  வளவள திணைக்களத்தினர்,  காவல்துறையினர், பிரதேச செயலக ஊழியர்கள் என அனைத்து துறையினரும் செல்வந்தர்கள் காடழிப்பு செய்து காணி அபகரிக்கும் நேரங்களில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஏன்? அவர்களிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு அமைதி காக்கிறார்களா?  என்றும் கேள்வி  எழுந்துள்ளது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் பாரிய அளவில் காடழிப்பு இடம்பெற்று காணி அபகரிக்கப்பட்ட விவகாரம் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனை தொடர்ந்து  புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திப்பிலி பகுதியில் அரச அதிகாரிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், செல்வந்தர்கள் என பலர் இணைந்து காட்டை அழித்து காணி அபகரிக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க  செயலக ஊழியர்கள் பின்னடித்து வந்தனர்.

இதேபோன்று பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பாரிய காடழிப்பு இடம்பெற்று வருகின்றது. ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அமைதியாக இருக்கின்றனர். இவ்வாறு செல்வந்தர்கள் காடழிப்பு செய்து காணி அபகரிக்கும் நடவடிக்கைகளில் உடந்தையாக செயற்படும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இலஞ்சம் பெற்றுக்கொண்டு உதவி செய்பவர்களை கைது செய்ய உடனடியாக மாவட்டத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம் ஒன்று நிறுவப்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்தோடு இந்த காடழிப்பு மற்றும் இயற்கை வள சுரண்டல்களுக்கு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் ஆளுநர் உள்ளிட்ட தரப்புக்கள் அதிக கவனம் செலுத்தி மாவட்ட வளங்களை பாதுகாக்க உதவுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 136This week ilakku Weekly Epaper 136 June 27 2021 e1625120114464 செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு

This week ilakku Weekly Epaper 136 June 27 2021 செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு