குற்றப்பத்திர அலுவலகம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன் நாணயக்கார

குற்றப்பத்திர அலுவலகம் வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும். சட்டமா அதிபர் திணைக்களத்துடன்  எவ்வித முரண்பாடுகளும் எமக்கு கிடையாது. சட்டமா அதிபருடன் இணக்கமாகவே செயற்படுகிறோம்.பிள்ளையானுக்கு பிணை பெற்றுக்கொடுக்க  சட்டமா அதிபர் முயற்சிக்கவில்லை என நீதி மற்றும் தேசிய...

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி குறித்து: டிரம்பின் அறிவிப்பு

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு, இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று...

செம்மணி மனித புதைகுழி விடயத்தில் உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது- கஜேந்திரகுமார் தெரிவிப்பு

செம்மணி மனித புதைகுழி விடயத்தில் உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது.தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும். செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கினை உன்னிப்பாக அவதானித்து...

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்மங்கள் கட்டவிழ்ப்பு

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் முஸ்லிம்் சமூகத்துக்கு எதிரான வன்மங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதனால் முஸ்லிம் சமூகத்தில் ஒரு தரப்பினர் தவறான வழிக்கு தள்ளப்பட்டார்கள். இவ்வாறான பின்னணியில் தான்  குண்டுத்தாக்குதல்கள்...

எந்தவகையான அச்சுறுத்தல்கள் வந்தாலும், சித்துபாத்தி மனித புதைகுழி வழக்கிலிருந்து விலகப் போவதில்லை :மயான நிர்வாகசபை அறிவிப்பு

எந்தவகையான அச்சுறுத்தல்கள் வந்தாலும், சித்துபாத்தி மனித புதைகுழி வழக்கிலிருந்து விலகப் போவதில்லை என்று குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ள சித்துபாத்தி மயான நிர்வாகசபை உறுப்பினரான கிருபாகரன் தெரிவித்துள்ளார். செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்...

தையிட்டியில் இன்றும் போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ்மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து தமிழ்த்தேசிய மக்கள்...

அறுகம்பை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்திய அரசு!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பை பகுதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி   பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை...

2026 இறுதிக்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதி: பிரதமர் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர்  ஹரிணி அமரசூரிய  தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்ற விவாதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 1000 பாடசாலைகளுக்கு பிற...

அமெரிக்காவின் டெக்ஸாசில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அமெரிக்காவின் டெக்ஸாசில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், நேற்றைய நாள் வரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை...

மனித புதைகுழிகளை அகழ்வதற்கு பிரிட்டன் உதவிகளை வழங்குகின்றதா? : உமா குமரன் எம்.பி. கேள்வி

பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி  விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் வெளிவிவகார...