தொல்பொருள் ஆலோசனைக் குழுவா? சிங்கள பௌத்த ஆலோசனைக் குழுவா? : பா. அரியநேத்திரன்

கடந்த 2025 நவம்பர் 01ஆம் திகதி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொல்பொருளியல் ஆலோசனைக்...

வனவளத் திணைக்களத்தால் வயல் காணிகள் அதிகரிப்பு!

வவுனியா கள்ளிக்குளம் சிதம்பரம் பிரதேசத்தில் மக்களின் நெற்காணிகளை வனவளத்திணைக்களம் கைப்படுத்தியுள்ளதுடன் நெற்பயிரை சேதப்படுத்தி தேக்குமரம் நடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளதாவது, எமது பூர்வீகக் காணிகளில் விவசாயம்...

இந்திய மீனவர்கள் அட்டூழியம்: வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்தழிப்பு!

வடமராட்சிக் கடற்பரப்பில் நூற்றுக்கணக்கில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகுகளால் வடமராட்சி மீனவர்களின் பல இலட்சம் ரூபாபெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளன. இந்தவிடயம் தொடர்பில் வடமராட்சி மீனவர்கள் தெரிவித்ததாவது: வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்யுங்கள்: சர்வஜன நீதி அமைப்புக் கோரிக்கை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்யவேண்டும் என சர்வஜன நீதி அமைப்புக் கோரியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையையும், வரைவுச் சட்டமூலத்தையும் நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள...

50,000 பட்டதாரி வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது அவர்களுக்கு தொழிலைப் பெற்றுக் கொடுக்கும்...

திருகோணமலை புத்தர்சிலை விவகாரத்திற்கு முல்லைத்தீவு தவிசாளர் கண்டனம்

திருகோணமலையில் சட்டத்திற்கு முரணாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.கோலகேஸ்வரன் (17.11.05) நேற்று கண்டனம் வெளியிட்டுள்ளார். தமிழர்களின் வரலாற்றுதொன்மை மிகுந்த பூர்வீக நிலமாகவும் இராவணன் உடைய...

தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைய சிறுபான்மையின நிபுணர்களுக்குத் தயக்கம்!

தொல்பொருள்தொடர்பான ஆணைக்குழுவில் உறுப்பினராக இணைவதற்கு, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. சிறந்த பரிந்துரைகளை முன்வைக்கும் பட்சத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல்...

யாழில் பதிவுசெய்யப்படாத விடுதிகள்:சட்டநடவடிக்கைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பதிவுசெய்யப்படாத விடுதிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பதிவுசெய்யாதவர்களுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பணித்துள்ளார். வடக்கு மாகாணச் சுற்றுலாப் பணியகத்தினருடனான...

அநுரவுடைய ஆட்சியிலும் பௌத்த அடாவடித்தனம்: ரவிகரன் எம்.பி. கண்டனம்

ஈழத்தமிழர்களின் பூர்வீக இடங்களிலெல்லாம் பேரினவாத அரசுகளால் அடாவடித்தன செயற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. அநுர அரசாங்கமும் இதற்கு விதிவிலக்கில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது- வென்றவன் பக்கமே வரலாறு சாயும்...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: சட்டப்படி நடவடிக்கை தேவை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதமாக்க இடமளிக்காது சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி அமைச்சுக்கே இதன் பொறுப்பு உள்ளது. கடந்த கால இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படத்த வேண்டும்....