சட்டமூலங்கள் இரண்டை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன கடந்த வெள்ளிக்கிழமை (6) சான்றுரைப்படுத்தினார்.
இந்தச் சட்டமூலங்கள் கடந்த பெப்ரவரி 19ஆம்...
நிபந்தனைகளுடன் போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதி
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.
டெஹ்ரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல், போருக்கான நட்டஈடு வழங்குதல் மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்களை...
ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்: தீப்பற்றி எரிந்த கப்பல்
ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வணிக கப்பல்கள் அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கப்பலில் இருந்து புகை கிளம்பி வரும் புகைப்படங்கள் வெளியான நிலையில் கப்பலில் இருந்த 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இத்துடன்...
400 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விடுவிப்புக்கு சர்வதேச எரிசக்தி முகவரகம் ஒப்புதல்
ஹோர்முஸ் நீரிணை செயலற்ற முறையில் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடையைச் சமாளிக்க, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க சர்வதேச எரிசக்தி முகவரகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாத்திஹ்...
“பொருளாதார கண்காணிப்பு குழு” முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு
சர்வதேச ரீதியில் நிலவும் பொருளாதார சவால்கள் மற்றும் வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும் பொதுமக்களின் நலனை உறுதிப்படுத்தவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட 'பொருளாதார கண்காணிப்புக் குழு'...
ஐ.நா.வின் ஆய்வு கப்பல் இன்று (11) இலங்கை வருகை!
ஐக்கிய நாடுகள் சபையின் கொடியுடன் கூடிய நவீன கடல் ஆராய்ச்சி கப்பலான R/V Dr. Fridtjof Nansen இன்று (11) கொழும்பை வந்தடைந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்தில் பாரிய...
சுரேஷ் சலேவின் கைதை நாமல் ராஜபக்ச விமர்சனம்
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல் என்று பாராளுமன்ற உறுப்பினர்...
கடல் கொள்கையில் நடுநிலையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு
இலங்கையின் கடல் எல்லைக்குள் நிலவும் பதற்றமான சூழலில், அரசாங்கம் ஒரு நடுநிலையான கொள்கையையே பின்பற்றுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக்...
இலங்கைக்கு ரஷ்யா அழுத்தம் கொடுப்பதாக நெதர்லாந்து சாடல்
நெதர்லாந்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் நடைபெற்று வரும் 'உலகப் பத்திரிகைப் புகைப்படக் கண்காட்சியில்' இடம்பெற்றுள்ள யுக்ரைன் போர் தொடர்பான புகைப்படங்களை நீக்குமாறு கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் அழுத்தம் கொடுப்பதாக நெதர்லாந்து தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.
இது...
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்!
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர்...










