ஜனாதிபதியின் அறிவிப்பில் நம்பிக்கை வைக்கமுடியுமா? -இளையதம்பி தம்பையா

146 Views

123990822 thambaya07.jpg ஜனாதிபதியின் அறிவிப்பில் நம்பிக்கை வைக்கமுடியுமா? -இளையதம்பி தம்பையா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய  உரையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை உள்ளதையும் அதற்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார். அனைத்துக்கட்சிகளின் அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். இவை தொடர்பில் சட்டத்தரணியும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான இளையதம்பி தம்பையா இந்த வாரம் உயிரோடை தமிழ் தாயகக் களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல்:

கேள்வி:

ஜனாதிபதி  ரணில்   பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சிம்மாசன உரையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? குறிப்பாக தமிழர்களுக்கு பிரச்சினை உள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டு அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கின்றார்.

பதில்-

”இது 2015 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் என்று செல்லப்படுகின்ற தொடர்ச்சியான கருத்தாகத்தான் இருக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் கூட அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக வருகின்ற போது  அதிகார கையளிப்பு சம்பந்தமாக அதாவது மாகாண சபைக்கு அதிகாரம் கொடுப்பது சம்பந்தமான விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு பாராளுமன்றத்திலே  சரியான ஒரு குழு ஒன்று நியமிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் ரணிலின் உரையிலே இதற்கு முதல் இருந்த ஜனாதிபதி  தேசிய இனப் பிரச்சினை என்பது இல்லை. அபிவிருத்திகளை மேற்கொண்டால்  அனைத்துப்பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்ற உடன்பாட்டில் இருந்தார். ஆனால் ரணில்    தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்று சொல்வது   ஆரோக்கியமான கூற்று. ஆனால் அதற்கு பின்னால் இருக்கின்ற  பின்னணி என்னவென்று எனக்கு சரியாக தெரியவில்லை.

 அது சிலவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுடைய ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான   தந்திரோயமான விடயங்களாகவும் பார்க்கலாம். அதற்கு அப்பால் இதை முற்றுமுழுதாக ஆரோக்கியமற்ற விடயம் என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை.   ஏனென்றால் தேசிய இனப்பிரச்சினையை பற்றி பேச எல்லா சிங்கள தலைவர்களுக்கும் துணிவு வருவதில்லை.

குறிப்பாக சந்திரிக்கா  ஜனாதிபதியாக போட்டியிடுகின்ற போது  தலைவர் பிரபாகரனை சந்தித்து பேசப்பொவதாக   கூறிய கருத்தே பெரிய பிரச்சினையாக இருந்தது.   மஹிந்த ராஜபக்சவும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று சொன்னாலும்      யுத்தத்தை தான் நடைமுறையில் அவர் நிலைநாட்டி இருந்தார்.  அதனால்   ரணிலின்   பாராளுமன்ற உரையில்    தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியது , இந்த பேரினவாத தலைவர்கள் தங்களுடைய கடும்  போக்கில் இருந்து வித்தியாசமான நிலைப்பாட்டில் இருக்கின்றனர் என்பது   வெளியாகியிருக்கின்றது.

ஆனால் இதை எவ்வாறு தமிழ் தரப்பு   பயன்படுத்த போகின்றது அதை எவ்வாறு கையாளப்போகிறார்கள்  என்பதிலும் அந்த பேச்சின் அர்த்தம் தங்கியிருக்கிறது”.

கேள்வி:

அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஜனாதிபதி இறங்கியிருக்கின்றார். இந்த முயற்சி எந்தளவுக்கு வெற்றிபெறும்?

“பாராளுமன்றம் கலைக்கப்படுவதை  யாரும் விரும்ப மாட்டார்கள் ஏனென்றால் பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்படுபவர்கள் அதிகமாக ஐந்து வருடங்களைக் கழித்தால் தான் அவர்களுக்கு உரிய ஓய்வூதியம் கிடைக்கும் என்ற   நிலமை இருக்கின்றது.   ஆகவே பாராளுமன்றத்தை கலைப்பதற்கான நடவடிக்கையை வரும் ஏப்பரல் மாதம் ஜனாதிபதி எடுத்தால் அது பாராளுமன்ற உறுப்பினர்களின் இருப்பை பாதிக்கும். அதனால் யாரும் அதை விரும்பப் போவதில்லை.

இந்நிலையில், ஜனாதிபதியின் அனைத்துக்கட்சி அரசாங்கம் ஒன்றுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்றுதான் நினைக்கின்றேன்.

அதே நேரம் ஆதரவு கொடுப்பது என்பது இரண்டு விடயத்தில் தங்கியுள்ளது.

ஒன்று எதிர்க்கட்சி ஒன்றும் இல்லாமல் இருக்கின்ற ஒரு சூழ்நிலையைக் கொண்டு வரும் ,அடுத்தது பெரும்பான்மையானவர்கள் அமைச்சுப் பதவிகளை நோக்கிச் செல்வார்கள். ராஜாங்க அமைச்சர், துறையமைச்சர் அனைவரையும் உள்ளடக்கி நாற்பது, நாற்பத்தைந்து அமைச்சர்கள் வருவதற்கான வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.

டொனமூர் யாப்பில் இருந்தது போல்   நிர்வாகக் குழுக்களை அமைத்து பாராளுமன்றத்தில் இருக்கின்றவர்களையும்   பாராளுமன்றத்திற்கு வெளியில் இருப்பவர்களையும் சம்பந்தப்படுத்தி நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என ரணில் தொடர்ந்து கூறி வருகின்றார்.

எனவே அவ்வாறான ஒரு பொது முறையையும் உருவாக்க வேண்டும் என்பதில் அவர் அக்கறையாக உள்ளார். அனைவரையும் அரசாக்கத்திற்குள் உள்ளெடுப்பதுதான் அவருடைய நோக்கம்.

அதாவது எதிர்ப்பில்லாமல், எதிர்ப்பவர்களைக் கூட, அந்த பொது நிர்வாகத்திற்குள் உள்ளடக்கி விட்டால், அவர்கள் அனைத்து வேலைகளையும் சுமந்துகொண்டு செல்வார்கள் என்ற அடிப்படையில் அவர் சிந்திப்பதாகத்தான் கருதுகின்றேன்.

ஆகவே ரணில் கூறுகின்ற சர்வ கட்சி ஆட்சி என்பது அனைவருக்கும் அமைச்சுப் பதவி என்பது அல்ல, அனைவரையும் அமைச்சுப் பொறுப்பில் ஈடுபடுத்திக்கொள்வது.

அதாவது டொனமூர் யாப்பில் கூறப்படுகின்றது போல் நிர்வாகக் குழுக்களை நியமித்து, அதற்குள் அனைவரையும் உள்வாங்கக்கூடிய ஒரு பொறிமுறையை அவர் தன்னகத்தே வைத்திருக்கின்றார்.

மேலும் பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு தேசிய அலோசனை சபை ஒன்றை அமைக்க வேண்டும் என்பதும் ரணிலின் எண்ணக்கருவில் ஒன்றாக உள்ளது. எனவே அதை நோக்கித்தான் அவர் பணயிக்கின்றார்.

இந் நடவடிக்கை அவருடைய ஆட்சிக்கு எந்த சிக்கலும் வராது என்பதுடன்   அவர் இலக்காக வைத்திருக்கின்ற பொருளாதார கொள்கை, இலங்கையை ஒரு முதலீட்டு நாடாக, அதாவது  டுபாய், கொங்கொங் போன்ற நாடாக   மாற்ற வேண்டும் என்பதுதான். அவவாறு மாற்றினால் தான் இலங்கையின் பொருளாதார நிலை மாறும். அதாவது வெளிநாடுகளின் பணம் வரும்,ஏனைய நாடுகளின் கருப்பு பணம் இங்கு வெள்ளை பணமாக மாற்றப்படும். அல்லது சட்டரீதியான பணமாக மாறுவதற்கான நிலைமையை ஏற்படுத்தும். இது கொங்கொங்,டுபாயில் இருக்கும் நடைமுறை. ஆசியாவிலே அடுத்து இலங்கையில் ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கையை ரணில் முன்னெடுத்து செல்வதற்கு அவ்வாறன ஒரு பொறிமுறை அவசியம்”.

கேள்வி:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மலையகக் கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சுக்களை ஆரம்பித்திருக்கின்றார். அந்தக் கட்சிகள் சார்ந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்தப் பேச்சுக்கள் வெற்றிபெறுமா?

”பொருளாதர பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் தற்போது மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் இது மட்டும் காரணமல்ல வெளிநாட்டு வருமானம் இல்லாததன் காரணமாக, வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சக்தியைக் கொண்டிருக்கவில்லை. கடந்த கால அரசாங்கம் இலங்கையை வெளிநாட்டு சந்தையாகத்தான் மாற்றி இருக்கின்றார்கள். அதாவது எங்களின் பொருட்களை விட வெளிநாட்டுப் பொருட்களின் சந்தையாகத்தான் இலங்கை இருந்திருக்கின்றது. அதனால் பொருளாதார பிரச்சியை தீர்க்க வேண்டும் என்பது தற்போது மக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.

அதே நேரம் ரணில் பௌத்த மதத்திற்கு எதிரானவர், சிங்கள பண்பாட்டிற்கு எதிரானாவர், சாதாரண மக்கள் குறித்து அவருக்கு அக்கறை இல்லை என்ற ஒரு கருத்துதான் அவருக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றது.

ரணிலின் பொருளாதார கொள்கையை விட, ரணிலின் தனிப்பட்ட விடையங்கள் குறித்துதான் கருத்துக்களை வெளியிடுகின்றனர். ஆனாலும் பொருளாதார பிரச்சினையைத் தீர்க்க அனைத்து கட்சிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. எனவே அனைவரும் இணைந்து செற்படுவதற்கு மக்கள் தடையாக இருக்க மாட்டார்கள்”.

கேள்வி:

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை   அங்கிருந்து வெளியேறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் போராட்டம் நடத்துவதற்கு தனியான ஒரு இடம் ஒதுக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் அணுகுமுறை குறித்த உங்கள் கருத்து என்ன?

”ஜனாதிபதி ரணிலை ஓர் ஜனநாயகவாதி என்று ஒருபோதும் நான் நம்பப்போவதில்லை. அவர் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களும் அவர்களுடைய அரசியலுக்கு உட்பட்டுத்தான் ஜனநாயகம் என்று கூறுகின்றனர். அதற்கு மாறாக விமர்சனங்கள் வருகின்ற போது அதை ஜனநாயக விரேதம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

காலிமுகப் போராட்டக்காரர்கள் ஜனநாயக போராட்டக்கார்கள். அவர்கள் தொடர்ந்து இருக்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கை நியாயமானது” என்றார் ரணில் .  ஆனால் தற்போது, போராட்டக்கார்களை வெளியேற நீதிமன்றம் ஊடாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரம் போராட்டத்திற்கென இடம் ஒதுக்குவதென்பது போராட்டத்தை கொச்சப்படுத்தும் ஒரு நடவடிக்கை. போராட்டங்கள் எப்போதும் மக்களின் கவனத்தை ஈர்க்ககூடிய இடங்களில்தான் செய்யப்பட வேண்டும். எனவே போராட்டத்திற்கென இடம் ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. மேலும் காலாகாலமாக போராட்டங்கள் நடைபெற்று வந்த இடங்களில்தான் தற்போது போராட்டங்கள் நடைபெற்றன. இதை மறுப்பது பாரம்பரிய ஜனநாயக வழிமுறைகளை மறுப்பதாகத்தான் கருத வேண்டியுள்ளது.

அத்தோடு ரணில் குறித்த போராட்டத்தை ஏற்றுக்கொண்டிருப்பாராக இருந்தால், போராட்டக்காரர்களை சந்தித்திருக்க வேண்டும். மேலும் போராட்டக்காரர்கள் மட்டுமல்ல  அரசியல் கட்சிகள் கலந்துரையாடி ஓர் முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும்.

அதே போன்று போராட்டத்தில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதால் தற்போது அச்சத்துடன் வீட்டிலையே இருக்க முடியாத   ஓர் சூழல் ஏற்பட்டிருப்பதும்   ஆரோக்கமற்ற விடையம். அமையான முறையில் இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் என்று கூறிக்கொண்டு அமைதியின்மையை ஏற்படுத்துவதாகத்தான் இது உள்ளது”.

Leave a Reply