செயற்கையாக இனிப்பூட்டப்பட்ட குடிபானங்கள் பக்கவாதத்தை ஏற்படுத்துமா?-ஆர்த்தீகன்

குருதி உறைதல் அல்லது குருதிக்கலங்களில் அடைப்பு என்பது தற்போதைய உலகில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்று. குருதிக்குழாய்களுக்குள் உருவாகும் அசையும் அல்லது அசையாத சிறிய கட்டிகள் குருதி உறைவதை (Blood clots) ஏற்படுத்தி அடைப்பை ஏற்படுத்தலாம். அது எந்த இடத்தில் ஏற்பட்டுள்ளது மற்றும் அதன் அளவு என்ன என்பதை பொறுத்து தான் அதன் பாதிப்புக்கள் கணிப்பிடப்படும்.

2020 ஆம் ஆண்டு இதைய நோயினால் இறந்தவர்களில் 6 இல் ஒருவர் குருதிக் கலன்கள் அடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு 40 செக்கனுக்கம் அமெரிக்காவில் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படகின்றார். 3.5 நிமிடத்திற்கு ஒருவர் அங்கு இந்த நோயினால் இறக்கிறார். ஆண்டுதோறும் அங்கு 8 இலட்சம் மக்கள் இந்த நோயினால் இறக்கின்றனர்.

நாடிகளில் ஏற்படும் அடைப்புக்கள் (Arterial blood clots) மிகவும் ஆபத்தானவை ஏனெனில் அவை தான் மூளை மற்றும் இதயம் போன்ற முக்கிய அங்கங்களுக்கு குருதியை வழங்குபவை. குருதி உறைவதற்கு பல காரணிகள் உண்டு. உடற்பயிற்சி இன்மை, பரம்பரை மூலக்கூறு, உணவுப் பழக்கங்கள், இரசாயணப் பொருட்கள் என்பன அவற்றில் சில.

ஆனால் தற்போதைய ஆய்வுகளின் அடிப்படையில் உடல் மெலிவதற்காக பயன்படுத்தும் குடிபானங்களும் (diet drinks) குருதி உறைவதை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது சிறிய கருதிக் கலங்களில் உறைதலை ஏற்படுத்துவதால் அது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது.

எமது உடலில் குருதி உறைவது என்பது முக்கியமானது. அதுவே எமக்கு காயங்கள் ஏற்படும்போது அதிக குருதிப் போக்கை கட்டுப்படுத்தும். ஆனால் தேவை ஏற்படாதபோது குருதி உறைவதே ஆபத்தானது. ischaemic பக்க வாதம் (stroke) என்பது மூளைக்கு செல்லும் குருதிக் நாடிகளில் ஏற்படும் அடைப்பாகும். மக்களில் ஏற்படும் பக்கவாதங்களில் 87 சதவிகிதமானவை இந்த வகையை சேர்ந்தது. கொழுப்புக்கள் குருதிக் கலங்களில் படிவதாலும் (plaques) இது ஏற்படும். அவையவங்களுக்கு குருதி செல்வது தடைப்படும்போது அவை ஒக்சிசன் மற்றும் குளுக்கோஸ் இன்றி இறக்க நேரிடலாம்.

தாவர உணவுகள் குருதிக்கலங்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கும்போதும்இ அவை தயாரிக்கப்படும் முறை சில சமயங்களில் ஆபத்தானதாக அமைந்துவிடுகின்றது. சீனி அல்லாத செயற்கையான இனிப்பு வகைகளை (medically called artificially sweetened beverages or ASB’s) கொண்ட குடிபானங்கள் குருதி உறைவை ஏற்படுத்துவதாக குருதிக் கலன்கள் தொடர்பான வைதியக் கலாநிதி போராசிரியர் மார்ச் வைற்லெ தெரிவித்துள்ளார்.

இந்த வகையான குடிபானங்கள் பக்கவாதங்கள் மற்றும் இருதைய நோய்களை ஏற்படுத்துவதாக மருத்துவ சஞ்சிகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மாதவிடாய் நின்ற பெண்களில் இதன் பாதிப்புக்கள் அதிகம். நாளங்கள் அல்லாது நாடிகளில் அடைப்பை ஏற்படுத்துவதால் பாதிப்புக்கள் அதிகம்.

செயற்கையான இனிப்பு இராசாயணம் சேர்க்கப்பட்ட குடிபானங்களை பயன்படுத்தும் 81000 பெண்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான தகவல்கள் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த the journal Stroke என்னும் விஞ்ஞான சஞ்சிகையில் பரசுரிக்கப்பட்டிருந்தது. மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக இந்த குடிபானங்களை குடிப்பவர்களை 11.9 வருடங்களுக்கு அவதானித்ததன் மூலம் பெறப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

தினமும் பல தடவைகள் இந்த பானங்களை அருந்துபவர்களில் கணிசமானனோர் பக்கவாதம் மற்றும் இருதைய நோய்களால் பதிக்கபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பொரும்பாலானவர்களில் நாடிகளிலேயே அடைப்புக்கள் ஏற்பட்டிருந்தன.

குறைந்த கலோரி உள்ள குடிபானங்களில் சேர்க்கப்படும் இரசாயணப் பொருட்கள். ஆபத்தானவை இல்லை என்று கூறமுடியாது. அவை அதிகளவு உள்ளெடுக்கப்படும்போது போன்ற பக்கவாதம் மற்றும் இருதைய நோய்களை உண்டாக்குகின்றன என தெரிவித்துள்ளார் the Albert Einstein College of Medicine in the Bronx, New York பல்கலைக்கழகத்தை சேர்ந்த Yasmin Mossavar-Rahmani, professor of clinical epidemiology and population health.

சிறிய குருதிக கலன்களில் உருவாகும் அடைப்பே அதிக ஆபத்தானதாக மாறுகின்றது. செயற்கையான இரசாயணம் சேர்க்கப்பட்ட குடிபானங்களை அருந்தாத பெண்களுடன் ஒப்பிடும் போது அதனை அருந்துபவர்களில் 23 விகிதம் அதிகமானவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 31 விகிதமானவர்களுக்கு ischaemic stroke எனப்படும் மூளையில் பாதிப்பு ஏற்படுகின்றது.

இந்த வகையான பானங்களால் இருதைய நோய்கள் மற்றும் பக்கவாதங்கள் ஏற்படுவதாக பல மருத்துவ ஆய்வக்கட்டுரைகள் தெரிவிக்கின்றபோதும் அதனை தீர்க்கமாக உறுதி செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளார் போராசிரியர் வைற்லெ. ஏனெனில் இதில் பல காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அதாவது இதனை நாம் ஒரு எமது அவதானமாகவே கருதுகின்றோம். மேலும் உறுதி செய்வதற்கு அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் Vermont பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ரசேல் ஜோன்சன்.

எனவே சில வகையான செயற்கை உணவுகளை நாம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளெடுப்பது எமக்கு ஆரோக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.