434 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இந்தியர்கள் ஐவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட கடல் ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த கேரள கஞ்சா கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களின் படகு ஒன்றும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
புத்தளம் குதிரைமலை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுப்பட்ட இந்தியர்களின் படகுகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போதே இவ்வாறு கேரள கஞ்சா காணப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்திய மீனவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 130 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் புத்தளம் – கல்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.