இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடற்படை சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கை கடல் மற்றும் வர்த்தக மையமாக மாறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
( National Defense Academy)தேசிய பாதுகாப்பு அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் நேற்று (14) பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நேபாளம் மற்றும் இலங்கைக்கான இருதரப்பு உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.