அமைதியை நிலைநாட்ட ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு – கோட்டா விசேட உத்தரவு

183 Views

முப்படையினருக்கும் அழைப்பு

ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு

இலங்கையில் பொது அமைதியை நிலைநாட்டுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய முப்படையினரை கடமைக்கு அழைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கட்டளையொன்றை பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த கட்டளை குறித்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (22)  பாராமன்றத்திற்கு அறிவித்தார்.

பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது சரத்தின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் சட்டம் – ஒழுங்கு விடயங்களை பாதுகாத்து நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் காவல்துறையினருக்கு இருக்கையில் இந்த அரசு பொறுப்பேற்ற நாள்முதல் சகல விடயங்களுக்கும் இராணுவத்தை முன்னிலைப்படுத்தியே வருகிற நிலையில், தற்போது பொது அமைதியை நிலைநாட்டல் என்ற பெயரில் ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் கடமைக்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply