விபசார விடுதி விவகாரம்: முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரை தண்டப்பணம் செலுத்த உத்தரவு

121 Views

விபசார விடுதி விவகாரம்

மட்டக்களப்பில் விபசார விடுதி நடாத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரான சிவகீர்த்தாவை 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமாகச் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான்  உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்னால் அமைந்திருந்து முன்னாள் மாநகரசபை மேயரான சிவகீர்த்தாவின் வீட்டுடன் நடாத்தி வந்த தங்கு விடுதியில் இயங்கிவந்த விடுதியைக் கடந்த 2016-10-24 ம் திகதி பொலிஸார் முற்றுகையிட்டனர்.

அத்துடன் அங்கு இருந்தவர்கள் உட்பட விடுதியை நடாத்திவந்த முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரான சிவகீர்த்தாவையும் கைது செய்தனர்.

விபசார விடுதி விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடர்ந்து நீதிமன்றில் முன்னிறுத்திய நிலையில் அவருக்கு எதிராக மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் ஆஜராகாத நிலையில் 3 மாத காலத்தின் பின்னர் அவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 4 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், நேற்றையதினம் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னாள் மாநகரசபை மேயரை 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமாகச் செலுத்துமாறு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்துள்ளார்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad விபசார விடுதி விவகாரம்: முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரை தண்டப்பணம் செலுத்த உத்தரவு

Leave a Reply